• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதற்கான அறிவிப்பு

ByKalamegam Viswanathan

Dec 8, 2024

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதற்கான அறிவிப்பு நாளை தொடங்குகின்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இடம் பெற செய்ய வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில், நிறுவனத் தலைவர் சா.அருணன் கோரிக்கை விடுத்தார்.

2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியது அப்போதைய அரசு , 2003,ம் ஆண்டு முதல் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கைகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர கோரினர். ஆனால் சென்ற ஆட்சியாளர்கள் செவிக் கொடுத்து கேட்காமல் அடுக்கு முறையை கட்டவிழ்த்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கொடுமைப் படுத்தினார்கள், வஞ்சித்தார்கள். அப்போது எதிர்கட்சி தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் போராட்டக் களத்திற்கே நேரடியாக வந்து தங்களை வறுத்திக் கொண்டு போராட வேண்டாம். நான் ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவேன் என அறிவித்தார். கோரிக்கைகள் அனைத்தும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்தார். பின்பு ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் துறைரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்தார். போராட்ட காலத்தை பணிக்காலமாக அறிவித்து பணப்பலனை வழங்கினார். துறைரீதியான நடவடிக்கை எடுத்து பணியிடமாற்றம் செய்து பந்தாடிய அனைவரையும் அதே பணியிடத்தில் கொண்டு வந்தார். பொது மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கினார். அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை ஆறு மாதம் கழித்து வழங்கி பின்பு ஒன்றிய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்வை வழங்குகிறதோ, அதே தேதியிட்டு வழங்குவேன் என அறிவித்து நிதிநிலை சீரானதும் உயர்த்தி வழங்கி வருகிறார் என்பதை அனைவரும் அறிவார்கள். தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் சார்பில் நன்றி பாராட்டினோம்.

மேலும் ஒன்றிய அரசு அறிவித்து இருக்கின்ற உத்தவாத ஓய்வூதிய திட்டத்தை போன்று கொண்டு இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட நாள் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டதை கொண்டு வருவதற்கான அறிவிப்பும், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் மீண்டும் வழங்குதல், பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம், இடைநிலை ஆசிரியர்களுக்கான சம வேலைக்கு சம ஊதியம் , சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டுவருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற செய்ய இந்தியாவின் முதன்மை முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.