

ஓபிஎஸை தலைவராக இல்லை மனுஷனாகூட ஏத்துக்கமாட்டாங்க என அதிமுக கொள்கைபரப்பு செயலாளர் நடிகை விந்தியா பேச்சு
இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே தலைமை யுத்தம் நடந்துவரும் நிலையில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நடிகை விந்தியா ஓபிஎஸ்-ஐ கடுமையாக சாடியிருக்கிறார். தர்மயுத்த நாடகத்தையே தள்ளி நின்னு வேடிக்கை பார்த்தவ நான். இந்த அதர்மயுத்த நாடகத்துக்கு கண்டிப்பா ஆதரவு தரமாட்டேன் எனக்கூறியவர். கருணாநிதிக்கு பாராட்டு பத்திரம் வாசித்தவரை உண்மையான அதிமுக தொண்டர்கள் தலைவராக இல்லை மனுஷனா கூட ஏத்துக்க மாட்டாங்க என்று தெரிவித்துள்ளார்.
