• Sun. Apr 28th, 2024

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை..!

ByM. Dasaprakash

Nov 26, 2023

அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவக்காற்றால் ஏற்படக்கூடிய மழை வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாகவே தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை ஆனது இரவு பகலாக பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய வைகை அணைக்கு அதிக அளவு நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் தற்போதைய நீர்மட்டம் (6மணி நிலவரப்படி) 65.52 அடியாகவும், அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 2247 கனஅடியாகவும், அணையின் நீர் இருப்பு 4745 மில்லியன் கன அடியாகவும் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 3669 கன அடியாகவும் உள்ளது. தொடர்ந்து அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து வைகை கரையோர மக்களுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் தொடர் மழையால் நீர்நிலைகள் நிரம்பி காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *