• Mon. Mar 24th, 2025

கேரளாவில் ரயிலுக்கு தீ வைத்த … வடமாநில தொழிலாளி கைது

ByA.Tamilselvan

Jun 2, 2023

கேரள மாநிலம், கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம், கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணூர் – ஆலப்புழா விரைவு ரயில் நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்புத்துறையினர், தீயை முழுமையாக அணைத்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற போது ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எரிபொருளுடன் ரயிலில் ஏறும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.அதன் அடிப்படையில், ரயிலுக்கு தீ வைத்த மர்ம நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.