• Tue. Jun 17th, 2025
[smartslider3 slider="7"]

பெரும் பரபரப்பு…வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

ByP.Kavitha Kumar

Jan 7, 2025

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீடித்து வரும் எல்லைப் பிரச்சினையால் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளில் ஈடுபடுவது வழக்கம். உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா ஏவுகணைச் சோதனைகளில் ஈடுபடுவதற்கு முக்கியமான காரணமே, தென்கொரிய நாடானது அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதுதான்.

இந்த நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டிருப்பது உலக நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவில் இருந்து நேற்று ஏவப்பட்ட அந்த ஏவுகணை 1.100 கிலோ மீட்டர் பயணித்து ஜப்பான் கடற்கரைப் பகுதியின் அருகே விழுந்ததாக அந்நாட்டு ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

தென்கொரியாவுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கன் வருகை தந்துள்ள நிலையில், வடகொரியா தற்போது ஏவுகணைச் சோதனையை நடத்தி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது .