• Fri. Jun 2nd, 2023

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் அசைவ திருவிழா – 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்கும் அசைவ திருவிழாவில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அமைந்துள்ள அனுப்பபட்டி கிராமத்தில் ஊர் காவல்தெய்வம் கருப்பையா முத்தையா கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவிழா நடைபெறும். இந்நிலையில், இன்று நடைபெற்ற இந்தத் திருவிழாவில், கரடிக்கல், செக்கானூரணி, மேலஉரப்பனூர் உட்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இந்த வினோத திருவிழாவில் 60-க்கும் மேற்பட்ட ஆடுகள் நேர்த்திக்கடனாக வெட்டப்பட்டு, பின்னர் கறி விருந்து தயார் செய்யப்பட்டது. இதை சாமி கருப்பையா முத்தையாவுக்கு படையலிட்ட பின்னர் ஆண்கள் மட்டும் உட்கொண்டனர். இந்த கறி விருந்தில் பங்கேற்றவர்கள் சாப்பிட்ட பின்பு இலையை எடுக்க மாட்டார்கள். இலை காய்ந்த பின்பு கிராம பெண்கள் இலையை எடுப்பார்கள். இந்த வினோத திருவிழாவில் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆண்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *