



கழுகுமலை – கயத்தாறு சாலை வளைவு பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு நெடுஞ்சாலை பகுதியில் கழுகுமலை பஞ்சாயத்து சார்பில் கட்டப்பட்டு வரும் கழிப்பறை கட்டிட பணிகளை நிறுத்த வேண்டும். இந்த பகுதியில் கழிப்பறை கட்டிடம் கட்டினால் அடுத்த சில மாதங்களில் வரும் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பில் கட்டிடம் இடிக்கப்பட்டு விடும். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். மேலும் இந்த இடத்தில் ஆட்டோ நிறுத்தப்பட்டு வருகிறது. அது தவிர சார்பதிவாளர் அலுவலக வாசல் பகுதியில் அருகில் கழிப்பறை கட்டிடம் கட்ட கூடாது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பஞ்சாயத்து நிர்வாகம் சார் பதிவாளர் அலுவலகம் முன்பு கட்டப்பட்டு வரும் கழிப்பறை கட்டிட பணிகளை நிறுத்தி வேறு இடத்தில் கழிப்பறை கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவில்பட்டி நெடுஞ்சாலை துறை உதவி இயக்குநர், கழுகுமலை பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோரிடம் பாஜக சார்பில் கோரிக்கை மனு கொடுக்க உள்ளோம். அவ்வாறு நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் மக்களை திரட்டி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கயத்தாறு மேற்கு ஒன்றிய தலைவர் ஜெகதீஷ் கூறியுள்ளார். முன்னதாக பாஜக மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் கழிப்பறை கட்டிடம் கட்டும் பணியை பார்வையிட்டனர்.


