• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

தீபாவளிக்கு ‘பிரின்ஸ்’ பட ரிலீஸ் இல்லை. அப்போ, எப்போ.?

Byகாயத்ரி

Sep 13, 2022

சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது தீபாவளிக்கு முன்னரே ரிலீசாகும் என்று தகவல் வெளிவந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் தமன் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிரின்ஸ்’. இந்த படம் தீபாவளியன்று அதாவது அக்டோபர் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் அக்டோபர் 21ஆம் தேதியே வெளியாகும் என்று கூறப்படுகிறது. எனவே தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே வெளியாக உள்ளதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை மரியா என்பவர் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரும் வரவேற்பும் பெற்றது.