

தமிழ் சினிமாவில் பல்வேறு சாதனைகளைப் படைத்து உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் கமல்ஹாசன். அவரது சாதனைப் பட்டியலை சொன்னால் நீண்டுக்கொண்டே போகும். இந்த பயணத்தில் மேலும் ஒரு மகுடமாய் அமைந்த படம் தான் விக்ரம். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். கமலின் தீவிர ரசிகனான இவர், இப்படத்தின் மூலம் தனது குருவுக்கு பிரம்மாண்ட வெற்றியை பெற்றுத் தந்தார். அண்மையில் கூட வெற்றிகரமாக 100 நாட்களை கடந்து சாதனை படைத்தது இப்படம். இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இப்படத்தை ரசிகர்கள் திரும்ப திரும்ப வந்து பார்த்தது தான் என கூறப்பட்டது. அப்படி இப்படத்தை 50 முறைக்கு மேல் பார்த்து கமலின் தீவிர ரசிகர் ஒருவர் உலக சாதனையே படைத்துள்ளார். அவரின் சாதனையை அங்கீகரிக்கும் விதமாக லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
