

விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நியூ என்ட்ரி கொடுத்துள்ளார் இயக்குனர் ஷங்கரின் மகள் நடிகை அதிதி ஷங்கர். விருமன் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.
விருமன் படம் ரிலீஸ் ஆகும் முன்பே அடுத்த படத்தில் டப் டப் என்று கையெழுத்து போட்டுவிட்டார் அதிதி. அதுவும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடிக்க தயாராகி வருகிறார். இப்படத்தில் ஒரு பத்திரிகையாளராக அதிதி நடிக்கிறார் என்பது போல் தகவல் வெளிவந்துள்ளது. அதிதி நல்ல பாடவும் செய்வாங்க, ஆடவும் செய்வாங்க என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.. சமீபத்தில் யுவனின் இசை கான்ஸர்ட் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இதில் நடிகை அதிதி ஷங்கரும் கலந்துகொண்டு மேடையில் யுவனுடன் இணைந்து தன்னுடைய விருமன் படத்தின் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார் அதிதி. அந்த வீடியோ இப்போ இணையத்தில் வைரலாகி வருகிறது.
