• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மழைக் காலத்தில் மின்வெட்டு இருக்காது – அமைச்சர் செந்தில் பாலாஜி

Byமதி

Sep 27, 2021

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பல மாவட்டங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுவது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. தற்போது மழை காலம் என்பதால் மின் வெட்டு இன்னும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், ‘மழைக் காலத்தில் தடையில்லா மின் சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உண்மையான மின்மிகை மாநிலம் இல்லை.

மின் நுகர்வோர் சேவை மையமான ’மின்னகம்’ ஜூன் மாதம் திறக்கப்பட்டது; இதுவரை 3.53 லட்சம் புகார்கள் வந்துள்ளன, 3.50 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும் 56,000 காலிப் பணியிடங்கள் மின் வாரியத்தில் உள்ளன. எந்த பணியிடங்கள் அவசரம், அவசியம் என்று ஆய்வு செய்து காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

அதுமட்டுமின்றி சேகர் ரெட்டி பற்றிய கேள்விக்கு, சேகர் ரெட்டி டைரியில் என் பெயர் இருப்பதை காட்டினால் நான் பொறுப்பேற்கிறேன். என் பெயர் அந்த டைரியில் இல்லை, யாரோ ஒருவர் சமூகவலைதளத்தில் கூறியதை சிலர் செய்தியில் வெளியிட்டுள்ளனர், என் தொடர்பான புகார்கள் இருந்தால் என்னிடமே கேளுங்கள்” என்றார் செந்தில் பாலாஜி.