• Wed. Dec 11th, 2024

மத்திய அரசைக் கண்டித்து.. மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய பாரத் பந்த்…

Byகுமார்

Sep 27, 2021

அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக மத்திய அரசை எதிர்த்து செப்டம்பர் 27 இன்று, அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக நாடு தழுவிய பாரத் பந்த் நடைபெற்றது இதன் ஒரு பகுதியாக மதுரை ரயில் நிலையம் முன்பு பல்வேறு அமைப்பினர் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர் இதில் மதுரை மாவட்ட எம்பி சு. வெங்கடேசன் ஏஐடியூசி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இதில் மக்களுக்கு விரோதமான செயல்களை மத்திய அரசு தொடர்ந்து செய்து வருவதாகவும் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் பெட்ரோலிய நிறுவனங்களை தனியாருக்கு கொடுப்பதை எதிர்த்தும் வங்கி, பொது காப்பீடு, ரயில்வே, விமானம், ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலைகளையும் கொடுப்பதை எதிர்த்தும் 3 வேளாண் சட்டங்களையும், புதிய மின்சார சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு நூறு நாள் வேலைத் திட்டத்தை இரு நூறு நாளாக உயர்த்தக் கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.