பாட்டாளி மக்கள் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர், கட்சி பொருளாளர் மன்சூர் உசேன், மண்டல பொறுப்பாளர் கரூர் பாஸ்கர் மற்றும் மருத்துவர் ராமதாஸ் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அவர் கூறியதாவது..
இன்றைய பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் டாக்டர் ராமதாஸ் ஐயா அவர்களால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளா அல்லது அன்புமணி அவர்களால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இது போன்ற தேவையற்ற கேள்விகளால் தான் கட்சியில் பிளவு ஏற்படுகிறது எனவும், ஊடகத்தை நம்பி தான் பாமக உள்ளது எனவும் டாக்டர் ராமதாஸ் ஐயா அவர்களால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ள கூட்டம் என தெரிவித்தார்.
சேலம் மாநகர மாவட்ட செயலாளர் ஆக இருந்த எம்எல்ஏ அருள் அவர்களை மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்கள் இணை பொதுச் செயலாளராக பொறுப்பு அளித்துள்ளார் எனவும் அவரை கட்சியிலிருந்து அன்புமணி ஐயா அவர்கள் நீக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
பாமக சார்பில் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்எல்ஏ அருள் அவர்கள் பங்கேற்காதது குறித்து கேள்வி எழுப்பியதற்கு உண்மையிலேயே அவருக்கு உடல் குறைவு ஏற்பட்டது மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்களின் அறிவுறுத்தல் படி தான் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு நல்ல கூட்டணி வலுவான கூட்டணி வெற்றி கூட்டணியை மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்கள் அமைத்துக் கொடுப்பார். யாருடன் கூட்டணி அமைப்பது என்பது ஐயா அவர்களுக்கு தான் தெரியும் என தெரிவித்துள்ளார்.