அமலாபால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து, முதன்முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கடாவர்’.
அறிமுக இயக்குநர் அனூப்.எஸ்.பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் அமலாபாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அபிலாஷ் பிள்ளை எழுதிய கதைக்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார்.
இதையொட்டி சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு கடாவர் படம் திரையிடப்பட்டது படம் முடிவடைந்த பின்பு பத்திரிகையாளர்களிடம் பேசிய அமலாபால்அபிலாஷ் பிள்ளையும், இயக்குநர் பணிக்கரும் என்னை சந்தித்து இந்தக் ‘கடாவர்’ படத்தின் கதையை கூறியதும், என்னுடைய கதாபாத்திரம் புதுமையானதாகவும், வலிமையானதாகவும் இருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.
பிறகு அவர்கள் தயாரிப்பாளர்கள் இல்லாமல் கஷ்டப்பட்டதை கண்டு, தயாரிப்பாளராகவும் பணியாற்ற சம்மதம் தெரிவித்தேன்.
கடினமாக உழைத்து பல போராட்டங்களுக்கு இடையே இந்த திரைப்படத்தின் பணிகளை நிறைவு செய்தோம். இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டபோது பல வடிவங்களில் தடைகள் உருவானது.இந்தப் படத்தை வெளியிட கூடாது என சிலர் மறைமுகமாக உழைத்தனர். நானும் இந்தப் படத்தில் நடித்திருந்ததால் படத்தில் கிளாமர் இருக்குமோ என்று சிலர் எதிர்பார்த்தனர். அப்படி எதுவும் இல்லையென்றவுடன் படம் பற்றிப் பேசக் கூட யாரும் முன் வரவில்லை.ஆனால்இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் எங்களின் இந்தக் ‘கடாவர்’ படத்தினை ஐந்து மொழிகளில் வெளியிட ஒப்புக் கொண்டது.
பல மெடிக்கல் கிரைம் திரைப்படங்கள் வெளியானாலும், தடயவியல் துறையில் இதுவரை படைப்புகள் அதிகமாக வெளியானதில்லை. காவல் துறையில் பணியாற்றும் தடயவியல் நிபுணர் வேடத்தில் நான் நடித்திருக்கிறேன்.
ஆகஸ்ட் 12-ம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓ.டி.டி.யில் ‘கடாவர்’ வெளியாகிறது.