• Sat. Apr 20th, 2024

இனி அம்மா உணவகத்தில் இலவச உணவு இல்லை

Byகாயத்ரி

Nov 15, 2021

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மழையால் சூழ்ந்தது.சென்னையில் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின.


இதை அறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், மழைக்காலம் முடியும் வரை தமிழகம் முழுவதிலும் உள்ள அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் விலையில்லா உணவு வழங்கப்படும்” என்று அறிவித்தார்.அதன்படி, காலை சிற்றுண்டியாக 5 இட்லி, இரண்டு கரண்டி பொங்கல் வீதம் வழங்கப்படும். மேலும், மதிய உணவாக கறிவேப்பிலை சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதமும், இரவில் சப்பாத்தியும் விலையில்லாமல் வழங்கப்பட்டது.


இந்நிலையில், சென்னையில் மழை வெள்ள பாதிப்புகள் குறைந்து வருவதால் அம்மா உணவகத்தில் இன்று முதல் உணவுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் இதுவரை 8 லட்சம் பேருக்கு விலையில்லா உணவுகள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *