• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க நிதிஷ்குமார் டெல்லி பயணம் !!!

ByA.Tamilselvan

Sep 4, 2022

பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் நாளை மறுதினம் டெல்லி செல்கிறார்.
டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரையும் சந்திக்க உள்ளார். வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது. மேலும், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இடதுசாரி தலைவர்களையும் நிதிஷ்குமார் சந்திக்க உள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன. பீகாரில் பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட பிறகு நிதிஷ்குமார் டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க இருப்பது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.