• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

புதிய கட்சி குறித்து அறிவிக்கிறார் குலாம்நபி ஆசாத்

ByA.Tamilselvan

Sep 4, 2022

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குலாம்நபி ஆசாத் புதிய கட்சியை துவங்க உள்ளார். ஜம்முவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த குலாம்நபி ஆசாத் கடந்த மாதம் 26-ந்தேதி அந்த கட்சியில் இருந்து விலகினார்.
இந்தநிலையில் குலாம் நபி ஆசாத் தனது புதிய கட்சியை இன்று அறிவிக்கிறார். ஜம்முவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் தனது கட்சியின் பெயரையும், கொடியையும் வெளியிடுகிறார். இதற்காக குலாம்நபி ஆசாத் டெல்லியில் இருந்து இன்று காலை ஜம்மு சென்றார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் குலாம்நபி ஆசாத்தின் போஸ்டர்கள் வைக்கப்பட்டு உள்ளன.