பிரபல மலையாள நடிகருக்கும், நித்யாமேனனுக்கும் திருமணம் நடைபெறப்போவதாக பரவிய வதந்திக்கு நடிகை நித்யாமேனன் முற்றுப்புள்ளி வைத்த விஷயம் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று படங்களில் படுபிசியாக இருந்து வரும் நடிகை நித்யாமேனன், வெப்தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து நித்யா மேனனுக்கும், பிரபல மலையாள ஹீரோ ஒருவருக்கும் விரைவில் திருமணம், அதனால் தான் அவர் புதுப்படங்களில் கமிட்டாகாமல் இருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியதையடுத்து, திருமணத்திற்கு பிறகு நித்யா மேனன் நடிக்க மாட்டாரா என்று சிலர் கவலையுடன் கேள்வி எழுப்பினர். நித்யா மேனன் நடிக்க வருவதற்கு முன்பே டீனேஜில் இருந்து அந்த ஹீரோவுடன் பழகி வருகிறார். முதலில் நட்பாக பழகிய அவர்கள் பின்னர் காதலர்களாகிவிட்டார்கள் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில் இது குறித்து மலையாள ஊடகத்திற்கு நித்யா மேனன் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,
சமூக வலைதளங்களில் பரவியிருக்கும் வதந்தியில் துளி கூட உண்மை இல்லை. இது போன்ற செய்திகளை வெளியிடும் முன்பு உண்மையை அறிந்து வெளியிட வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யாமேனன்..!













; ?>)
; ?>)
; ?>)