கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் 31-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.கொரோனா கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.அத்துடன், வணிக வளாகங்கள், உணவகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் ரத்து செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.