• Sat. Feb 15th, 2025

சென்னை உள்பட 20 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை

ByIyamadurai

Jan 28, 2025

சென்னை, சீர்காழி உள்ளிட்ட 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் இன்று அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் புரசைவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் புறநகர் பகுதிகளிலும், மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் கிராமத்தில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெறுகிறது. அதிகாலை 3 மணிக்கு காரில் வந்த என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனை முன்னிட்டு அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் புரசைவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் புறநகர் பகுதிகள் உள்பட 5 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முழுமையான சோதனைக்கு பின்னரே அதுபற்றிய விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.