• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

புத்தாண்டின் – சிறப்பு பிரார்த்தனை விசுவல்

BySeenu

Jan 1, 2025

புத்தாண்டை முன்னிட்டு, கோவையில் கிறித்துவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. கோவையில் உள்ள பல்வேறு கிறித்துவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

குறிப்பாக கோவை புனித மைக்கேல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு யேசுவின் முன்னால் மண்டியிட்டு மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.

இதனையடுத்து இப்பேராலயத்தின் தென் மண்டல பேராயர் தாமஸ் அக்வினாஸ் திருப்பலி நிகழ்ச்சியை நடத்தியதுடன் அனைவருக்கும் புதிதாக பிறந்து இருக்கும் இந்த ஆண்டு அனைவருக்கும் நோய் நொடியின்றி எல்லா வளமும் நலமும் பெற்று இருக்க வேண்டுமென்று கூறி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

குறிப்பாக கோவை மாநகரப் பகுதிகளில் ஆங்கில புத்தாண்டு இன்று உற்சாகமாக கொண்டாடபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.