• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிய இணையதளம் வடிவமைப்பு

Byவிஷா

May 2, 2024

மத்திய அரசு நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்கும் பணியின் ஒரு பகுதியாக, இனி சுப்ரீம் கோர்ட்டுக்கு என்று ஒரு புதிய இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நீதித்துறையை டிஜிட்டல்மயமாக்கும் பணிக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகள் மற்றும் மாவட்ட கோர்ட்டுகளின் பணிகள் டிஜிட்டல் முறைக்கு படி படியாக மாற்றப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சுப்ரீம் கோர்ட்டுக்கு என்று https://www.sci.gov.in என்ற புதிய இணையதளம் ஒன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது.
அதன் முழு செயல்பாடு நேற்று (புதன்கிழமை) முதல் தொடங்கியது .இந்த புதிய இணையதளத்தில் வழக்கு விவரங்கள், அதன் தற்போதைய நிலைப்பாடு, தீர்ப்புகள் ஆகியவற்றை மக்கள் மிக எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளம் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.