• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆண்டாள் மற்றும் லட்சுமிக்கு புதிதாக நீச்சல் குளம்…

Byமதி

Oct 25, 2021

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் உள்ள ஆண்டாள் மற்றும் லட்சுமி என பெயரிடப்பட்ட யானைகளுக்கு கட்டப்பட்ட புதிய நீச்சல் குளத்தில் முதன் முறையாக குளிக்க வைக்கப்பட்டன .

திருக்கோயில் யானைகள் ஆண்டாள் மற்றும் லட்சுமி குளிப்பதற்காக ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பஞ்சக்கரை சாலையில் கோயிலுக்கு சொந்தமான “உடையவர் தோப்பில்” 56அடி நீளம் 56 அடி அகலம் , 6.5 அடி உயரத்தில் 3 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய நீச்சல் குளம் கட்டப்பட்டது. அந்த குளத்திற்க்கு இன்று 25.10.2021 காலை 9.30 மணியளவில் கோயில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின்பு கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் ஆண்டாள் மற்றும் லட்சுமி ஆகிய இரண்டு யானைகளும் முதன் முறையாக குளிக்க வைத்து பார்க்கப்பட்டது. அப்போது உதவி ஆணையர் கு.கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் மா.வேல்முருககன் , மேலாளர் திருமதி உமா ஆகியோர் உடனிருந்தனர்.