• Thu. Dec 5th, 2024

டெபிட், கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிகள்…!!

ByA.Tamilselvan

Sep 1, 2022

அக்டோபர் மாதம் முதல் டெபிட், கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிகள் ரிசர்வ் வங்கி மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான விதிகள், ஆன்லைன் பண பரிவர்த்தனை வரம்புகள் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளும் பின்பற்ற வேண்டும் என்று வெளியிட்டது. அதைத் தொடர்ந்து தற்போது அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் புதிய விதிகள் அமல்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வாடிக்கையாளரின் ஒப்புதல் இல்லாமல் கிரெடிட் கார்டை ஆக்டிவேட் செய்யக்கூடாது என்பது ஒரு முக்கியமான விதியாகும்.
கிரெடிட் கார்டு அனுப்பப்பட்ட வாடிக்கையாளர், கார்டை பெற்ற தேதியிலிருந்து 30 நாட்கள் அதை ஆக்டிவேட் செய்யவில்லை என்றால் வங்கிகள் தானாக ஆக்டிவேட் செய்யக்கூடாது. கஸ்டமரின் ஒப்புதலை பெற்ற பிறகு தான் வங்கிகள் அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
கடன் அட்டை வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளரின் ஒப்புதலை பெற்றுக்கொண்டு OTP அங்கீகரிக்கும் அடிப்படையில்தான் கார்டை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
கிரெடிட் கார்டை ஆக்டிவேட் செய்வதற்கு வாடிக்கையாளர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அதை வழங்கிய வங்கி அல்லது நிதி நிறுவனம் அந்த அட்டையை கேன்சல் செய்ய வேண்டும்.
கஸ்டமர் கிரெடிட் கார்டு தேவையில்லை என்பதை உறுதி அளித்த ஏழு நாட்களுக்குள் கார்டை ரத்து செய்ய வேண்டும். இதற்கு வாடிக்கையாளரிடம் இருந்து எந்த கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது.
வாடிக்கையாளரின் அனுமதி அல்லது ஒப்புதல் இல்லாமல் கார்டு லிமிட்டை மாற்றக்கூடாது.
கார்டு வழங்கும் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் கார்டு ஹோல்டரின் ஒப்புதலோடுதான் கிரெடிட் லிமிட் வழங்கியுள்ளார்கள், எந்த கால கட்டத்திலும் அந்த விதிமுறையை மீறவில்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். ஜூலை 1 ஆம் தேதியே இந்த விதி கட்டாயமாக அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டாலும், செம்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *