• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

டிவிட்டர் பயனாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிப்பு..!

Byவிஷா

Jul 3, 2023

டிவிட்டர் பயனாளர்களுக்கு எலான்மஸ்க புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்;.
டிவிட்டர் வலைத்தளம் பல்வேறு தகவல்கள், படங்கள் ஆகியவற்றை உலகம் முழுதும் உள்ளோருடன் பகிர்ந்து கொள்ளப் பெரிதும் பயன்படுகிறது. பல பிரபலங்கள் மட்டுமின்றி உலக தலைவர்கள் பலரும் டிவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். உலக அளவில் ஐந்தில் ஒருவருக்கு டிவிட்டர் கணக்கு உள்ளதாகப் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

நேற்று டிவிட்டர் தளம் உலகம் முழுதும் திடீரென முடங்கியதால் உலகளவில் டிவிட்டரில் தகவல்களை அனுப்ப முடியாமலும் பெற முடியாமலும் கோடிக்கணக்கானோர் தவித்தனர். எனவே இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் தொழில்நுட்ப பணிகள் சரி செய்யும் நடவடிக்கையில் டிவிட்டர் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
டிவிட்டர் சேவை முடங்கி உள்ளதாகப் பயனர்கள் தெரிவித்து நிலையில் இதற்குப் பதில் அளிக்கும் வகையில் எலான் மஸ்க் தற்காலிகமாக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதன்படி டிவிட்டரில் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பதிவுகளையும், பிற பயனர்கள் ஆயிரம் பதிவுகளை, புதிய பயனர்கள் 500 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு தேவையற்ற தகவல்களை ஒழிப்பதற்காகத் தற்காலிகமாக விதிக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார்.