• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பதவி:

By

Sep 13, 2021 ,

சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்ற, திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் மகன் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ வாக பதவி ஏற்றதும், அவருக்கு முக்கிய துறையின் அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவ்வாறு எந்த பதவியும் அவருக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.