• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

கிராமப்புற மாணவர்களுக்காக நூலகம் அமைத்த பூவிதழ் கல்வி அறக்கட்டளை!

By

Sep 13, 2021 ,

திருச்செங்கோடு அருகே கிராமப்புற மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு பயன்பெறும் வகையில் நூலகம் தொடங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பன்னீர் குத்தி பாளையம் பகுதியில் கிராமப்புற மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு பயன்பெறும் வகையில் நூலகம் ஒன்று, பொதுமக்கள் பங்களிப்புடன் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் மாணவர்களும் இந்த நூலகத்தால் பயன் பெற வேண்டுமென்ற நோக்கத்துடன் பூவிதழ் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் இலவச நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை நல்லாசிரியர் விருது பெற்ற பாலசுப்பிரமணியம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பல்வேறு தலைப்புகளில் போட்டித் தேர்வுகளுக்கான நூல்களை அறக்கட்டளை நிர்வாகிகளும், பொதுமக்களும் இலவசமாக வழங்கினர்.

இதேபோன்று கிராமங்கள் தோறும் நூலகங்கள் அமைக்கப்பட்டால் போட்டித் தேர்வில் மாணவ, மாணவிகள் பங்கு பெற ஏதுவாக இருக்கும் என பொதுமக்கள் பாராட்டினர்.