• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கூகுளில் புதிய நடைமுறை அமல்

Byவிஷா

May 1, 2025

கூகுள் நிறுவனம் அறிவித்துள்ள ஆண்டு செயல் திறன் மதிப்பீட்டின் மூலம் ஏராளமான ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்பது மட்டுமின்றி, அதிக ஊதியம் பெரும் ஊழியர்களுக்கும் இது நெருக்கடியை ஏற்படுத்தும் சூழலையும் உருவாக்கியுள்ளது.
இது தொடர்பாக பேசிய கூகுள் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவு அதிகாரிகள்..,
”இது நன்றாக வேலை செய்யும் ஊழியர்களுக்கு வெகுமதியை அளிப்பதோடு மற்றவர்களையும் ஊக்கப்படுத்தும்” என தெரிவித்துள்ளனர்.
இந்தாண்டு செயல் திறன் மதிப்பீடு தொடர்பாக ஊழியர்களுக்கு ஈமெயில் வாயிலாக விளக்கம் அளித்துள்ள கூகுள் நிறுவனம், இலக்குகளை அடைய உயர் செயல் திறன் எப்போதும் இல்லாத அளவிற்கு முக்கியமான அளவு என தெரிவித்துள்ளது. அதே சமயம் நிறுவனத்தின் பட்ஜெட் ஒதுக்கீட்டில் எந்தவித மாற்றமும் இருக்காது எனவும் கூகுள் தெளிவுபடுத்தியுள்ளது. கூகுள் நிறுவனத்தை தொடர்ந்து போட்டி நிறுவனங்களான மெட்டா, மைக்ரோசாப்ட் ஆகியவையும் ஆண்டு செயல்களின் மதிப்பீடு முறையை பின்பற்ற கூடும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.