



தேனி மாவட்டம் கம்பத்தில், நமக்கு நாமே திட்டத்தில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நகராட்சி பள்ளி கட்டிடத்தை, நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி சார்பில் “நமக்கு நாமே” திட்டத்தின்கீழ் ரூ 40/- இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப் பட்ட நகராட்சி தேரடி ஆரம்பப் பள்ளிக் கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கம்பம் நகர்மன்றத் தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை தாங்கி, நகராட்சி ஆணையாளர் உமாசங்கர், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், நகராட்சி பொறியாளர் அய்யனார், உதவிப் பொறியாளர் சந்தோஷ்குமார், மேலாளர் ஜெயந்தி, திமுக மூத்த வழக்கறிஞர் துரை நெப்போலியன், நகர் மன்ற உறுப்பினர்கள் பார்சி, மணிகண்டன், தீன் முகமது, விருமாண்டி, குரு.குமரன் சுமதி, விஜயலட்சுமி, லதா, வசந்தி, வளர்மதி, அன்பு குமாரி, அபிராமி, சுந்தரி, சுபத்ரா, சாகிதா பானு, தீபா மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் TKN.திருமலைகற்பகம்,
KVP.முருகேசன், இராமலிங்கம் பிள்ளை அறக்கட்டளை மேலாளர் சங்கர், கணபதி, ஜெகதீசன், ஜெகன் பிரதாப், கார்த்தீஸ்வரன், சிவமணி மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பொதுமக்கள், மாணவ மாணவிகள், கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

