• Mon. Jul 13th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சுதா கொங்காதரா இயக்கும் புதிய படம் அறிவிப்பு

கே எஃப்ஜிபடம் மூலமாக இந்திய அளவில் மிகப்பெரிய கவனம் ஈர்த்த ஹோம்பாலே பிலிம்ஸ் புரொடக்‌ஷன் நிறுவனம் தனது 14-ஆவது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் ஹோம்பாலே பிலிம்ஸ். தற்போதுபிரபாஸ் நாயகனாக நடித்து வரும்சலார் படத்தை தயாரித்து வருகிறது
சமீபத்தில் வெளியாகிஇந்தியத் திரையுலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள KGF2 படத்தை தயாரித்து ரசிகர்களிடம் சரியாக கொண்டு போய் சேர்த்த நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தனது அடுத்தப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுசூரரைப்போற்று படம் மூலமாக சர்வதேச அளவில் கவனம் பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.
சுதா கொங்கரா தற்போது சூரரைப்போற்று படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின் 2D entertainment சார்பாக சூர்யா தயாரித்து நடிக்கும் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். அதன் பிறகு இத்திரைப்படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது