• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பொங்கல் பண்டிகையை மலைவாழ் மக்களுடன் கொண்டாடிய நியூ லைஃப் அறக்கட்டளை

Byஜெ.துரை

Jan 16, 2023

சென்னை நியூலைஃப் அறக்கட்டளை தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகையை மலை வாழ் மக்களுடன் கொண்டாடியது.
சென்னையை தலைமை இடமாக கொண்டு கடந்த 4 வருடமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய குழந்தைகளின் படிப்பு மற்றும் அவர்களது குடும்பத்தினர்ளின் வாழ்வாதார தேவைக்கு உதவி செய்து வரும் இந்த தனியார் தொண்டு நிறுவனமானது தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆடலூர் ஊராட்சியில் உள்ள குழவிக்கரை கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த மக்களுக்கு அவர்கள் அத்தியாவசிய தேவையான பொருட்களான அரிசி, சர்க்கரை, ரவை, சேமியா, பிஸ்கட், சோப்பு , புத்தாடைகள் போன்றவைகளை அவர்களுக்கு வழங்கி அவர்களை மகிழ்வித்து அவர்களுடன் சேர்ந்து பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டடினர்.