• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை வெளியான புதிய தகவல்

ByA.Tamilselvan

Jul 15, 2022

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை வெளியான புதிய தகவல்
முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனா தொற்று பரிசோதனைகளுக்காக காவேரி மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார். கடந்த 3 நாட்களாக தனிமைப்படுத்தி கொண்டு இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று திடீரென சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.
காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருந்ததாவது, கொரோனா அறிகுறிகளுக்கான பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்புக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் .மேலும் உடல்நிலை சீராக இருப்பதாகவும் பெரியளவில் சிகிச்சை அளிக்கும் அளவுக்கு பாதிப்பு இல்லையென்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில் காவேரி மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.