• Sun. Jun 4th, 2023

அவசர அவரசமாக முதலிரவை முடித்து விட்டு ஓடிய புதுமாப்பிள்ளை

ஆலப்புழா காயங்குளம் பகுதியை சேர்ந்த அஸ்கருதீன் ரஷீத்துக்கும் (30) அடூர் அருகே உள்ள பழக்குளம் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 30ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது.
பின்னர் இருவருக்கும் அன்று இரவு முதலிரவு நடந்துள்ளது.

நள்ளிரவு 3 மணி அளவில் அஸ்கருதீன் தனது நண்பர் ஒருவர் விபத்தில் சிக்கியாதகவும் அவருக்கு ரத்தம் கொடுப்பதற்காக தான் செல்ல வேண்டுமென்றும் கூறி அங்கிருந்து சென்றுள்ளார். காலை வெகு நேரமாகியும் அவரை காணவில்லை.

இதனை அடுத்து சந்தேகம் அடைந்த பெண் வீட்டார் நடத்திய சோதனையில், அஸ்கருதீன் தனது மனைவியின் 25 பவுன் நகை மற்றும் அவருக்கு வரதட்சணையாக கிடைத்த இரண்டு லட்ச ரொக்கம் ஆகியவற்றுடன் தலைமறைவானது தெரியவந்தது. இது குறித்து அடூர் காவல் நிலையத்தில் பெண் வீட்டார் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அஸ்கருதீன் ரஷீத்துக்கும் ஆலப்புழாவில் சேப்பாடு என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் 2 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *