• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய மேம்பாலங்கள்

Byமதி

Dec 14, 2021

சென்னையிலும் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகின்றது. சென்னையில் தினமும் 10 லட்சம் கார்கள், 40 லட்சம் இருசக்கர வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்திற்க்கு ஆளாகின்றனர். எனவே, கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ரூ.335 கோடி செலவில் 3 இடங்களில் மேம்பாலங்களை கட்ட முடிவு செய்துள்ளது. இதன்படி, ஓட்டேரியில் ரூ.62 கோடி செலவில் 508 மீட்டர் நீளம், 8.4 மீட்டர் அகலத்திற்கு 2 வழிச்சாலை மேம்பாலமும், கணேச புரத்தில் ரூ.142 கோடி செலவில் 680 மீட்டர் நீளம், 15.20 மீட்டர் அகலத்துக்கு 4 வழி மேம்பாலம் கட்டப்படுகிறது.

அதேபோல தி.நகர் உஸ்மான் சாலையில் 1,200 மீட்டர் நீளம், 8.4 மீட்டர் அகலத்திற்கு 2 வழிச்சாலை மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது. இந்த மேம்பாலத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.