ஆவடியில் சி.ஆர்.பி.எப். மற்றும் டிமாங் திவ்யாங்கா இணைந்து மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் கலந்துக் கொண்டனர்.
இந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் சி.ஆர்.பி.எப்.-ல் பணிபுரியும் அதிகாரிகள் 10 பேர் மும்பையில் இருந்து வந்த மாடல் அழகிகளுடன் ராம்ப் வாக் செய்தது பார்வையாளர்களை கவர்ந்தது. மேலும் நிகழ்ச்சியில் கடந்த 2018ம் ஆண்டு பாண்டிசேரி முதல் கடலூர் செல்லும் வழியில் சுமார் 5 கிலோ மீட்டர் வரை தனது கைகளை மட்டும் பயன்படுத்தி நீச்சல் அடித்து சாதனை படைத்த ஸ்ரீராம் கலந்துக்கொண்டு மும்பை அழகிகளுடன் ராம்ப் வாக் செய்தார்.
தொடர்ந்து 25.30 மணி நேரம் ஃபேஷன் ஷோ நடத்தி கின்னஸ் சாதனை படைத்த ஷோபனா, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி தடகள வீரர்கள், குழந்தைகளை வைத்து 100வது ஃபேஷன் ஷோ செய்தார். இந்த ஷோவில் மெர்சல் படத்தில் குழந்தை நட்சத்திரம் அக்ஷத் குழந்தைகளுடன் கேட் வாக் செய்தார். தேசிய கூடை பந்து போட்டியில் சாதித்த மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீராங்கனைகள் கலந்துக் கொண்டு ராம்ப் வாக் செய்தனர்.