• Thu. Jun 25th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

10 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் கேட்ட கேள்வி.. இன்னும் மறக்க முடியவில்லை.. நித்யா மேனன்

Byமதி

Dec 14, 2021

நித்யா மேனன் தமிழில் வெகு சில படங்களே நடித்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தமிழ் மட்டுமின்றி, கன்னடம், தெலுங்கு, மலையாளத்தில் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்தவர்.

சமீபத்தில் நித்யாமேனன் தனது சினிமா அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.அதில் அவர், ‘‘10 ஆண்டுகளுக்கு முன்பு நான் தெலுங்கு படத்தில் அறிமுகமான போது பிரபாஸ் பற்றி என்னிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு நான் அவர் யார் என்று எனக்கு தெரியாது என்று பதில் அளித்தது சர்ச்சையாக்கினர். அப்போது எனக்கு தெலுங்கும் தெரியாது, தெலுங்கு சினிமாவைப் பற்றியும் தெரியாது. ரசிகர்கள் என்னை பயங்கரமாக விமர்சித்தனர். இந்த சம்பவம் நடந்து பத்து ஆண்டு ஆன போதிலும் என்னால் மறக்க முடியவில்லை. சினிமா துறையில் அப்போதுதான் அடியெடுத்து வைத்த எனக்கு இது பெரிய அடி. இந்த சம்பவம் என்னை மிகவும் காயப்படுத்தியது.

மேலும் அவர், நான் நம்பர் ஒன் ஆக வேண்டும் என நினைத்ததில்லை. பெரிய கதாநாயகி என்ற பெயர் எனக்கு வேண்டாம். இப்படியே எனக்கு நன்றாக இருக்கிறது. எனக்கு பிடித்ததை நல்லபடியாக செய்ய வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்ப்பேன்” என்றார்.