• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

தென்காசியில் புதிய நியாயவிலை கடை திறப்பு!

தென்காசி மாவட்டம், சடையப்பபுறத்தில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று புதிதாக அமைக்கப்பட்ட நியாயவிலைக்கடையை, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இந்நிகழ்ச்சியில், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனி துரை, கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனி துரை, மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, பஞ்சாயத்து தலைவர் முத்துமலை மதி செல்வன், ஒன்றிய கவுன்சிலர் முருகேசன், மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.