• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

மாதா திருத்தல தேவாலயத்திற்குபுதிய தேர் தச்சுப் பணி அர்சிப்பு..,

கன்னியாகுமரி கடற்கரையை தொட்டு வான் உயர அழகிய கோபுரம் கொண்ட அலங்கார உபகார மாதா திருத்தல தேவாலயத்தில் உள்ள மாதா தேரின் காலம் 230_ஆண்டுகள் பழமையானது. கால ஓட்டத்தின் காரணமாக. தேரின் சில பகுதிகள் சிதலமடைந்து வரும் நிலையில்,

அலங்கார உபகார மாதா திருத்தல தேவாலயத்திற்கு புதிய தேர் செய்வது என பங்கு பேரவையின் குழு தலைவர், துணைத் தலைவர் நிர்வாக குழு உறுப்பினர்களான
பங்குப் பேரவை தலைவர் பங்கு தந்தை உபால்ட், துணை தலைவர் டாலன் டிவோட்டா, செயலாளர் ஸ்டார்வின், பொருளாளர் ரூபன் ஆகியோர் அடங்கிய குழுவினர் முடிவு செய்த நிலையில்.

இன்று (மார்ச்-22) ஞாயிறு திருப்பலிக்கு பின்.

அலங்கார உபகார மாதா திருத்தல கோவில் தேர் பெறைக்கு முன்னால் உள்ள வளாகத்தில். புதிய தேர் பணிக்கான ‘தச்சு’ பணியை, தேவாலய பங்கு தந்தை உபால்ட் ஜெபித்து தேர் செய்வதற்கான பணியை தொடங்கி வைத்தார்.

புதிய தேர் உருவாக்க செலவாக ரூ.35 லட்சம் என திட்டமிடப்பட்டுள்ளதாகவும். புதிய தேரின் உயரம் 31 அடி, அகலம் 12 அடி என தேர் வேலையை செய்யும் பணியை
ஏற்றுள்ள தச்சு பணியாளர் குழுவின் தலைவர் தெரிவித்தார். இந்த குழுவினர்களால்
தூத்துக்குடி பனிமய மாதா திருத்தல தேர் செய்யப்பட்டதாக பங்கு பேரவையினர் தெரிவித்தார்கள்.

இந்த ஆண்டுக்கான கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தல தேவாலயத்தின் திருவிழா எதிர் வரும் டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் நிலையில். அதற்கு முன்பாக தேர் பணிகள் முழுமையடையும் வகையில் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக,தலைமை தச்சர் தெரிவித்தார்.