• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கோயம்பேடு கீரை மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவருக்கு புதிய கார் பரிசு..,

ByPrabhu Sekar

Jun 26, 2026

சென்னை கோயம்பேடு மார்க்கெட் கீரை மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் வை. கோவிந்தராஜின் 73-வது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை காலை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சங்கத்தின் பொதுச்செயலாளர் ரமேஷ் மற்றும் துணைச் செயலாளர் முருகவேல் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைவர் வை. கோவிந்தராசுவுக்கு கேக் வெட்டி, மலர் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி பிறந்தநாளை விழாவினை உற்சாகமாக கொண்டாடினர்.

அதனை தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட் கீரை மொத்த வியாபாரிகள் சங்கத்தின் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கட்டி ஆரதழுவி தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

விழாவின் சிறப்பு அம்சமாக, கோயம்பேடு மார்க்கெட் கீரை மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் ரூ.18 லட்சம் மதிப்பிலான புதிய கார் ஒன்றை சங்கத்தின் தலைவர் கோவிந்தராசுவிற்கு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

எதிர்பாராத இந்த பரிசைப் பெற்ற தலைவர் வை. கோவிந்தராசு நெகிழ்ச்சியடைந்து, சங்க உறுப்பினர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சங்க ஒருங்கிணைப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், கோயம்பேடு மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு கோயம்பேடு வியாபாரிகள் மத்தியில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.