• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மதுரை தல்லாகுளம் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு..!

Byவிஷா

Jun 7, 2023

மதுரை மாவட்டம், மதுரை தல்லாகுளம் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 31 உட்பட்ட தல்லாகுளம் கண்மாய் வடக்கு தெருவில் புதியதாக அங்கன்வாடி மையம் கட்டித் தர வேண்டும் என தொடர்ந்து அந்த பகுதி மக்கள் மாமன்ற உறுப்பினர் முருகனிடம் கோரிக்கை வைத்து வந்த நிலையில், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய அங்கன்வாடி மையத்தை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கன்வாடி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி அதனை திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது மண்டல தலைவர்கள் மாநகராட்சி அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.