• Fri. Apr 19th, 2024

சரிவை சந்தித்த நெட்ஃபிளிக்ஸ் (Netflix) நிறுவனம்…

Byகாயத்ரி

Apr 20, 2022

நெட்ஃபிளிக்ஸ் (Netflix) 200,000 சந்தாதாரர்களை இழந்த நிலையில், செவ்வாயன்று நெட்ஃபிளிக்ஸ் (Netflix) பங்குகள் மதிப்பு 20% குறைந்தது. ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் தொலைக்காட்சி சேவை நிறுவனம் தனது சந்தாதாரர்களை இழந்தது இதுவே முதல் முறை. செவ்வாயன்று வெளியிடப்பட்ட காலாண்டு வருவாய் அறிக்கையின்படி, ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2,00,000 என்ற அளவில் குறைந்துள்ளது.
உக்ரைன் படையெடுப்பின் காரணமாக ரஷ்யாவில் அதன் சேவை நிறுத்தப்பட்டதும் ஒரு காரணம் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 221.6 மில்லியன் சந்தாதாரர்களுடன் உள்ள நிறுவனமாக உள்ளது. இது கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் இருந்து சற்று குறைந்து அளவாகும்.சிலிக்கான் வேலி தொழில்நுட்ப நிறுவனத்தின் நிகர வருமானம் $1.6 பில்லியனாக இருந்த நிலையில், ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் நிகர வருமானம் $1.7 பில்லியனாக இருந்தது. வருவாய் புள்ளிவிவரங்கள் வெளியான பிறகு, சந்தை வர்த்தகத்தில் நெட்ஃபிக்ஸ் பங்குகள் சுமார் 25 சதவீதம் சரிந்து $262 ஆக இருந்தது.

நெட்ஃபிக்ஸ் ஒரு கடிதத்தில், ‘நாங்கள் விரும்பும் அளவுக்கு வேகமாக வருவாயை அதிகரிக்கவில்லை. 2020-ல் கோவிட் வந்த பிறகு, நிறுவனம் நிறைய பயன்களை அடைந்தது. 2021-ல் அதிக பலன் கிடைக்கவில்லை. சுமார் 222 மில்லியன் குடும்பங்கள் அதன் சேவைக்காக பணம் செலுத்தும் அதே வேளையில், தொலைக்காட்சி ஸ்ட்ரீமிங் சேவைக்கு பணம் செலுத்தாத 100 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுடன் கணக்குகள் பகிரப்பட்டுள்ளன என்று ஸ்ட்ரீமிங் நிறுவனம் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) மதிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *