• Sat. Feb 15th, 2025

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா..!!

ByG.Suresh

Jan 23, 2025

சிவகங்கை நகர் அரண்மனை வாசல் அருகில் சுதந்திரப் போராட்ட தியாகி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை நகர் திமுக சார்பாக நகர் மன்ற தலைவர் சி. எம். துரைஆனந்த் தலைமையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

உடன் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், வீனஸ் ராமநாதன், அயூப்கான், ராமதாஸ் ,சி எல் சரவணன், வீரகாளை, செந்தில்வேல் பாண்டியன், பிரேம்குமார் மற்றும் EX. Mc ஜெயக்குமார் மற்றும் வட்ட பிரதிநிதி திருசசி திரு‌கேண்டீன் ரவி, மற்றும் கழக நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள் மற்றும் நேதாஜி சிலை பராமரிப்பு குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.