• Sat. Apr 26th, 2025

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

ByG.Suresh

Jan 24, 2025

அதிமுக மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பால்தான் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டது. திமுக அரசால் அல்ல என சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியில் தெரிவித்தார்.

சிவகங்கை அரண்மனை வாசல் எதிரே முன்னாள் முதல்வர் MGR இன் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிமுக மற்றும் பொதுமக்களின் எதிர்பால்தான் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் பணியை ரத்து செய்யப்பட்டது. திமுக அரசால் அல்ல என உறுதிபட தெரிவித்தார். மேலும் பரந்தூர் விமான நிலையம் குறித்து எதிர்க்கட்சிகள் புரிதல் இல்லாமல் பேசி வருவதாக எச். ராஜா கூறியிருப்பது உண்மையே என்றும், விரைவில் இதற்கு நல்ல முடிவு வரும் என நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து 4 ஆண்டு கால திமுக ஆட்சியில், முதலமைச்சர் ஸ்டாலினின் ஆள தெரியாத நடவடிக்கையால் ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் கடன் சுமை ரூ. 3 லட்சமாக அதிகரித்துள்ளது. கடன் சுமை உயர்விற்கு அதிமுக அரசு அல்ல என்றார்.

ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு, சட்டத்துக்குட்பட்டு நாங்கள் ஆளுநரை மதிக்கின்றோம். அவரது செயல்பாடுகள் சரியாக இருந்தால் ஆதரிக்கிறோம் என்றார். முதல்வர் ஸ்டாலின் தனது தந்தைக்கு 80 கோடி ரூபாய் செலவில் பேனா சிலை வைப்பது மனசாட்சி இல்லாத செயல் என்றவர், முதல்வர் அறிவிக்கும் நலத்திட்ட உதவிகள் எல்லாம் போகின்ற போக்கில் கணக்கு காண்பிப்பதற்காக மட்டுமே என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.