• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நெல்லை பள்ளி விபத்து: உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

Byமதி

Dec 17, 2021

நெல்லையில் பள்ளி கட்டிடம் இடிந்து உயிரிழந்த மாணவர்கள் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே சாப்டர் மேல்நிலைப்பள்ளி, நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இந்த பள்ளியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல மாணவர்கள் பள்ளிக்கு சென்று பயின்றனர்.கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து சுழற்சி முறையில் தற்போது மாணவர்கள் நேரடியாக சென்று கல்வி கற்று வருகின்றனர். காலை 11 மணியளவில் இடைவேளை நேரத்தின் போது மாணவர்கள் கழிவறைக்கு செல்ல தொடங்கினர். கழிவறையின் ஒரு பகுதிக்கு வெளியே மாணவர்கள் காத்து நின்றனர்.

அப்போது திடீரென கழிவறையின் தடுப்பு சுவர் இடிந்து அங்கு நின்ற மாணவர்கள் மீது விழுந்தது. இதைப்பார்த்த சக மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர். இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே 2 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், தீவிர சிகிச்சையில் இருந்த 3 மாணவர்களில் மேலும் ஒரு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் நேரில் பள்ளிக்கட்டடத்தை ஆய்வு நடத்தினர். விசாரணை தொடங்கிய காவல்துறையினர்,
இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசெல்வி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:- நெல்லையில் பள்ளி கட்டிடம் இடிந்து உயிரிழந்த மாணவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 4 மாணவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.