நீத்தார் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு ஸ்தூபியில் கொட்டும் மழையிலும், எஸ்பி அபிஷேக் குப்தா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிரவாதம் மற்றும் பல்வேறு காரணங்களால் கடந்த ஒரு ஆண்டில் இந்தியா முழுவதும் உயிரிழந்த 191 வீரர்களுக்கு 36 குண்டுகள் முழங்க அஞ்சலி, உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினர் இதில் பங்கேற்ற நிலையில் அவர்களுக்கு மாவட்ட எஸ்பி மரியாதை செய்த நிலையில், உயிரிழந்தவர்களை நினைத்து உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தீவிரவாதிகள் மற்றும் பல்வேறு காரணங்களால் உயிர் நீத்த வீரர்களுக்கு ஆண்டு தோறும் அக்டோபர் 21ம் தேதி நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

அதேபோன்று நீத்தார் நினைவு நாள் அக்டோபர் 21ம் தேதியான இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து இந்தியா முழுவதும் தீவிரவாதிகள் தாக்குதல் மற்றும் பல்வேறு காரணங்களால் கடந்த ஒரு ஆண்டில் உயிர்நீத்த 191 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு, ஸ்தூபியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தலைமையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் மலர் வளையம் வைத்தும் 36 குண்டுகள் முழங்க இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையினர் இந்த ஆண்டு ஒரு சிலர் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்தினர் நீத்தார் நினைவு தினத்திற்கு வருகை தந்த நிலையில், அவர்களுக்கு மாவட்ட எஸ்பி மரியாதை செய்த போது, உயிரிழந்தவர்களை நினைத்து உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.