நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சார கூட்டம் அனைத்து கட்சியிலும் சூடுப்பிடித்த நிலையில் பல கட்சி வேட்பாளர்கள் தங்களின் வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர்.
அந்த வகையில் விருதுநகர் நகராட்சி 23வது வார்டு பகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முகமது நெயினார், பல வருட காலமாக மக்களுக்கு பழக்கப்பட்ட ஒருவர் மற்றும் அவரது சகோதிரி இரண்டு முறையும் இவர் ஒரு முறையும் விருதுநகர் நகராட்சியில் மக்கள் ஒரு மனதாக தேர்வு செய்து கவுன்சிலராக இருந்தனர். சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்களில் தன் கட்சியான அதிமுகவை மக்களிடம் சேர்த்து அதிக செல்வாக்கு பெற்ற முகமது நெயினார் நன்கு அறிமுகமானவர். மக்கள் பிரச்சனைகளை அதிகாரிகளிடம் சேர்த்து உடனுக்குடன் தீர்த்து வைக்கும் குணம் கொண்டவராக இருந்ததால் தான் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.டி. ராஜேந்திர பாலாஜியே 23வது வார்டுல முகமது நெயினாரை நிறுத்துங்கப்பா என்ற அன்புக்கிணங்க ஆணையில் தான் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது தேர்தல் களத்தில் 23 வது வார்டில் திமுக அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் கடுமையான போட்டி இருந்தாலும் முகமது நெயினார் பிரச்சாரத்திற்கு ஈடுக்கொடுக்க முடியாமல் திமுகவினர், ஹலோ … பறக்கும் படையா… அதிமுக காறங்க பணம் கொடுக்கிறாங்கனு தகவல் வந்துச்சு.. அது என்னனு கேளுங்க அப்பு .. முகமது நெயினார் போகும் பாதையெல்லாம் சோதனையிட்டார்கள். நீங்க சுத்தமானவர் தான்னே ஆனால் மேலிடத்து ப்ரசர்(திமுக) என்று டாட்டா சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்கள்.இதை பார்த்த அதிமுகவினர் நீங்க சீண்டுனா தோத்தா போய்டுவோம்..விருதுநகர் மாவட்டம் முழுவதும் அதிமுக கொடி தான் பறக்கும் என்று கெத்தாக கூறிவருகின்றனர்.
இதுபற்றி கூடுதல் தகவல் அறிய விருதுநகர் அதிமுக ஐடி விங் நகர செயலாளர் பாசறை சரவணனிடம் பேசினோம் அப்போசு அவர் கூறுகையில் விருதுநகரை பொறுத்த வரையிலும் அதிமுகவின் கோட்டை என்று திமுகவிற்கே தெரியும். அந்த பயத்துல தான் நகர செயலாளர் முகமது நெயினார் அலுவலகத்தை சோதனையிட திமுவினர் தூண்டிவிடுகின்றனர். இதுமட்டுமா எங்க நகர செயலளார் நெருங்கிய உறவுக்காரங்களையே அவருக்கு எதிரா நிக்க வச்சி ஓட்டுகளை பிரிச்சி வெக்காலாம்னு மனக்கோட்டை கட்டிட்டு இருக்காங்க. அந்த மனக்கோட்டைய உடைக்கிறது தான் எங்க வேலை. எங்கள் பாசமிகு அண்ணன் கேடிஆர் ஆசியுடன் எங்கள் நகர செயலாளர் 2000த்திற்தும் மேல் வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் இது நிச்சயம், சத்தியம்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விருதநகர் மாவட்ட திமுக உடன்பிறப்புகளிடம் பேசினோம் ..நாங்க எதுக்குங்க ரெய்டு விட போறோம்..அதுலாம் அதிகாரிங்க பண்றாங்க ..எங்க ஆட்சி விடியல் ஆட்சி ..நாங்க செய்ததை வெச்சி தான் வாக்கு கேட்டுட்டு இருக்கோம். இதை உணராத அதிமுகவினர் எங்க மேல பழி சொல்றாங்க என்று கூலாக கூறுகின்றனர்.தற்போது விருதுநகரில் நகர்ப்புறத் தேர்தல் களைக்கட்டியுள்ளது…










