• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

எதிர்ப்புகளை மீறி நீட் நுழைவுத் தேர்வு

By

Sep 11, 2021 , ,

நாடு முழுவதும் இன்று முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் என்ற நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தை அடைந்த நிலையில், முதுகலை நீட் தேர்வு தள்ளிப் போனது.

கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், இளங்கலை மருத்துவ படிப்ப்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்ட அறிவிப்பின்படி, முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் செப்டம்பர் 11ம் தேதி கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று நாடு முழுவதும் முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.