மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாக குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் துர்நாற்றம் வீசி கொடிய நோய் பரவும் நிலை – அப்பகுதி குடியிருப்போர்கள் பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இன்மை என புகார் – இந்நிலை தொடர்ந்தால் கிராமத்தை விட்டு வெளியேறுவதாகவும் குடியிருப்பு வாசிகள் தெரிவிப்பு.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வாகைகுளம் கிராமத்தில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அந்த கிராம பஞ்சாயத்தில் உள்ள ஆறாவது வார்டு பகுதியில் மேற்கு தெருவில் , 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன .
இந்த குடியிருப்புகளுக்கு செல்லும் வழி பாதையில், கழிவு நீர் வாய்க்கால் இன்றி சாலையில் ஓடும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் நிலையும் , பச்சை நிற பாசமடைந்து சிறுவர்கள் , முதியோர்கள் கீழே விழுந்து காயம் ஏற்படும் நிலையும் உள்ளதாலும், அந்த வழியில் திருவிழா காலங்களில் சுவாமி சிலைகள் எடுத்துச் செல்லும் பாதையாக உள்ள நிலையிலும் , அங்கு அடிப்படை வசதி இல்லாமல் கழிவுநீர் வாய்க்கால் கட்டி தராமலும் , குடிநீர் கழிவு நீரில் கலந்து நோய் தொற்று பரவும் நிலை உருவாகி வருவதாக , அப்பகுதியில் குடியிருப்போர் பலமுறை மாவட்ட நிர்வாகத்தில் முறையிட்டும் , எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர் .
இது குறித்து தமிழக அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..