சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இம்பா தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பாக இம்பா பேமிலி ஸ்போஸ்ட் மீட் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்ச்சி இம்பா அமைப்பின் பொருளாளர் அப்பு சந்திரசேகர் தலைமை தாங்கினார்.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.தொழிலதிபர் சீசெல்ஸ்,ஆனந்தம் செல்வகுமார், மற்றும் இம்பா உறுப்பினர்கள், மற்றும் மாணவர்கள் உட்பட சுமார் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த தமிழக மருத்துவம் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர்.இம்பா அமைப்புஎங்களுக்கு புதிதல்லகொரோனா பெருந்தொற்று காலத்தில் எங்களுடன் களத்தில் இரங்கி சமூக தொண்டாற்றிய அமைப்பு இம்பா. ஈரோட்டில் புற்றுநோய்கான மருத்துவமனை வேண்டும் என்று இம்பா சமூக மக்கள் முன்வைத்த கோரிக்கையை சட்டமன்றத்தில் நிறைவேற்றியதுதமிழக அரசு.இதுபோல் சமூக,சமுதாய சேவைகளை சிறப்பாக செய்து வரும் இம்பா அமைப்பு இன்று முன்னெடுக்கும் IMPA Sports Meet மூலம் உடற்பயிற்சி மற்றும் மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் துவக்கவிழா நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தது கரும்பு தின்ன கூலியா என்று என்னை நானே கேட்டு கொண்டேன்.சீரான உடற்பயிற்சி செய்து தன்னையும் சமுதாயத்தையும் பேணிக்காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.மேலும் தமிழக அரசு சார்பி்ல் நடத்தப்படும் மாரத்தான் போட்டிகளில் இம்பா உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் பெரும்திரளாக கலந்து கொள்ளவும் இந்நிகழ்ச்சியில் அழைப்பு விடுக்கிறேன் என்றும் கூறினார்.