மதுரை அமலி பதின்ம மேனிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சிறப்பு முகாமின் 3ம் நாள் நிகழ்வில்
“ அறிவின் புதிய வானம் டிஜிட்டல் கல்வி” என்ற தலைப்பில், கல்யாணசுந்தரம் English theatre விளையாட்டு மற்றும் நடிப்பு பயிற்சி அளித்து மாணவர்களை ஊக்குவித்தார்.

பின்னர் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 7 காட்சிகள் அடங்கிய “டிஜிட்டல் பயன்பாடுகள்” குறித்த விழிப்புணர்வு நாடகத்தை நடித்துக் காட்டினர்.
தொடர்ந்து மாணவர்கள் களப்பணிகளில் பங்கேற்று சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தினர்.
டிராமா செல்வம் தெருக்கூத்து நாடகத்தைப் பற்றியும், முகப்பாவணைகளையும் நடித்து காண்பித்து, மாணவர்களை நடிக்க வைத்தார்.
டிஜிட்டல் கல்வியறிவு பற்றிய பல பயனுள்ள நிகழ்வுகளோடு, 3ம்நாள் நிறைவு பெற்றது.